Tuesday, 31 October 2017

சளி, இருமலுக்கு இஞ்சி, வெற்றிலை (cold,cough relif ginger&betel leaves)

நமக்கு எளிதிலே, மிக அருகிலே, தெருவோர கடைகளிலே கிடைக்கும் மூலிகைகள் குறித்து பார்த்து வருகிறோம். அந்தவகையில் வெற்றிலை, திரிகடுக சூரணத்தின் பயன்களையும், பித்த தலைச்சுற்றினை நீக்கும் இஞ்சியின் நன்மைகள் குறித்து பார்க்கலாம். வெற்றிலையில் அபரிமிதமான மருத்துவ குணங்கள் இருப்பதால், நமது மூதாதையர் அதனை பாக்குடன் சுவைத்து வந்தனர். குறிப்பாக வெற்றிலையானது நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்றுநோய்களில் இருந்து உடலை பாதுகாக்கிறது. அஜீரணத்தை நீக்கி செரிமானத்தை தூண்டுகிறது. உடலுக்கு வெப்பம் தரும் இந்த வெற்றிலையானது, தாய்ப்பால் சுரப்பியாகவும், வாய்நாற்றத்தை போக்குவதோடு, சிறுநீரக பெருக்கியாகவும் இருக்கிறது. வெற்றிலையை மெல்லுவதினால், ஈறுகளில் இருக்கின்ற வலி, இரத்த கசிவு ஆகியவற்றை நீக்கி,  ஆட்டம் காணும் பற்களையும் கெட்டியாக பிடிக்கும் நிலைக்கு  ஈறுகளை தயார் செய்கிறது. சளி, இருமல், வீக்கம் போன்ற தொண்டை அழற்சிக்கான வெற்றிலை ரசம் தயாரிப்பது குறித்து பார்க்கலாம். தேவையான பொருட்கள்: வெற்றிலை, மிளகுப்பொடி, திப்பிலி, பூண்டு, பெருங்காயப்பொடி, உப்பு. 


ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, நசுக்கிய பூண்டு, திப்பிலி, பெருங்காயப்பொடி மற்றும் மிளகுப்பொடி சேர்க்கவும். அதனுடன் நறுக்கிய வெற்றிலையை சேர்த்து கொதிக்கவிடவும். வெற்றிலை நன்கு வெந்ததும், ரசத்தை வடிகட்டி அருந்தலாம். டான்சில்ஸ், வீக்கம் போன்ற நோயால் பாதிக்கப்படுவோர் இதனை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும். வாயு தொல்லைகளை நீக்கி, உள்ளுறுப்புகளை தூண்டக்கூடிய வெற்றிலையில் வைட்டமின் சி சத்துக்கள் மற்றும் இரும்பு, கால்சியம், பொட்டாசியம் உள்ளிட்ட மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளன. அனல்மூட்டிய வெற்றிலையை மார்பில் பற்றாக போடுவதால் சளி, இருமல் குறையும். உணவுக்கு சுவை தரும் இஞ்சியிலும் வெற்றிலையை போன்ற மருத்துவ குணங்கள் உள்ளன. வைட்டமின்களுடன், நார்சத்தும் இருப்பதால் சீதள நோய்களை நீக்கி, உடல் இறுக்கம், குடல் புண்களை குணப்படுத்துகிறது. குறிப்பாக திரிகடுக சூரணங்களான சுக்கு, மிளகு, திப்பிலியுடன் இஞ்சி சாறு, தேன் கலந்து அருந்துவதால் ஆஸ்துமா நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது. குரல்வளை, தொண்டை பகுதி, சுவாச பாதைகளில் உள்ள சளியினை நீக்கி சுவாச பாதையை சீர் செய்கிறது. இஞ்சியை பயன்படுத்தி பசியை தூண்ட செய்யும் பச்சடி தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: இஞ்சி- நறுக்கியது, பெருங்காயப்பொடி, பூண்டு, சீரகம், கடுகு, புளி, நெய், வெல்லம், உப்பு. 

வானலியில் நெய் ஊற்றி, பெருங்காயம், கடுகு, சீரகம், இஞ்சி துண்டு சேர்த்து வதக்கவும். பின்னர் சுவைக்காக உப்பு, சுண்டக்காய் அளவு புளி, சிறிது வெல்லம் சேர்த்து அரைத்தெடுக்கவும். இந்த பச்சடியை நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து சாதத்துடன் சாப்பிடும்போது, பசியை தூண்டும் மருந்தாகவும், சுவையின்மையை நீக்கும் மருந்தாகவும் அமையும். பயன்கள்: இஞ்சி எச்சிலை சுரக்க செய்கிறது. மாதவிலக்கை தூண்டக்கூடிய ஒன்றாக இருக்கிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. நச்சுக்களை வெளி தள்ளுகிறது. வயிற்றுபுண் மற்றும் ஜலதோசத்திலிருந்து உடனடி நிவாரணம் தருகிறது. இஞ்சியை சர்க்கரை சேர்த்து சாப்பிடும்போது, பேருந்து பயணங்களில் வாந்தியை தடுப்பதோடு, ரத்த ஓட்டத்தை சமநிலைப்படுத்தி, ரத்த நாளத்தில் உள்ள கொழுப்புகளை அகற்றி மாரடைப்பு வராமல் தடுக்கிறது. ரத்த வட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்கிறது. இஞ்சு சாறுடன் உப்பு சேர்த்து தொடர்ந்து 3 நாட்கள் குடித்துவர பித்த தலைசுற்று நீங்கும். வண்டுக்கடி மற்றும் காது வலிக்கு வெற்றிலை சாறு நன்கு பயனுள்ளதாக இருக்கும். 

Thursday, 26 October 2017

ஆன்ஜியோகிராம் – ஒரு தற்காலிக தீர்வு மட்டுமே! நிரந்தத் தீர்வாகாது

1. ஆன்ஜியோகிராம் (ANGIOGRAM)



மனித உடலில் உள்ள‍ ஒருகுறிப்பிட்ட இடங்க ள் மரத்துப்போவதற்காக தொடை இடுக்கில் ஊசி போடப்படுகின்றது. பிறகு DYE-ஐ இதற் காக செய்யப்பட்ட CATHETER மூலம் இரத்த குழாய் செலுத்தப்பட்டு, அதன்மூலம் எடுக்க‍ப் படும் புகைப்படங்களை, உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு, அதன்மூலம் அடைப்பு ஏதேனு ம் இருக்கின்றதா என்பதை மருத்துவர்கள் அறிந்து கொள்கிறார்கள்.

2. ஆன்ஜியோ பிளாஸ்டி மற்றும் ஸ்டென்டிங் (ANGIO PLASTY AND STENTING)

ஆன்ஜியோ பிளாஸ்டி என்பது மேற்கூறிய ஆன்ஜியோகிராமை தொ



டர்ந்து, கைதேர்ந்த மருத்துர்க ளால் மேற்கொள்ள‍ப்படும் சிகிச் சை முறையாகும். இதற்காக சிறந் த‌ முறையில் தயாரிக்கப்பட்ட மிக நுண் குழாய் இரத்த குழாயில் வை த்து GUIDE WIRE செலுத்தப்பட்டு பலூனை இரத்தகுழாயின் அடைப் பின் குறுக்கே வைத்து கொஞ்சம் கொஞ்சமாக பெரிதுபடுத்தப்படுகி ன்றது. இதனால் அடைப்பு நீக்கப் பட்டு இரத்த ஓட்டம் ஏற்படுகின்ற து. சிலநேரங்களில் STENT என்னும் உலோக குழாய்சுருளை இரத்த குழாய் அடைப்பு பகுதியில் பொருத்தி விடுவார்கள். இதனால் இரத்த ஓட்டம் சீராக சென்றாலும் பலருக்கு இதனால் காய தழும்பு ஏற்பட்டு தசை தடிமனாக மாறி மீண்டும் இரத்த குழாய் அடைப்பு ஏற்பட்டுவிடு கின்றது.


இத்தகைய‌ முறைகள், இது போன்றவை நோ யின் விளைவை தற்காலியமாக குணமாக்கி னலும், இந்த முறை நோhயினை நிரந்தரமாக தீர்க்க‍முடிவதில்லை. 



நோயின்மூலகாரணம் சரிசெய்யப்படாதவரை நோயின் விளைவை மட்டும்; நீக்குவது தற் காலிக தீர்வுதான். வேரோடு நோய்களையப்ப டவேண்டும் அதுதான் நோயை நிரந்தரமாக நீக்கிநோயின் விளைவுகளிலிருந்தும் நம்மை நிரந்தரமாக காக்கும்.

அப்பன்டீஷ் குடல் அழற்சி - காரணமும் தீர்வும் (Appendix)

நாமே பல நேரம் குறிப்பிடுவோம். குரங்கிலிருந்து, மனிதன் பரிணாம வளர்ச்சியடைந்த பொழுது, வால் மறைந்து விட்டது. ஆனால் அது இருந்ததற்கான ஆதாரமாக முதுகெலும்பின், அடி எலும்பாக, ஒரு சிறு எலும்பாக வால்பகுதி நீட்டிக் கொண்டிருப்பதை இன்றும் காணலாம். இது போன்று வால்களைப் பற்றியும், வால் எலும்புகளைப் பற்றியும் நமக்கு பலச் செய்திகள் தெரியும்.


இது என்னடா குடல் வால் என்று நினைக்கிறீர்களா? வால் இருக்கிறதோ, இல்லையோ, குடல் வால் இருப்பது உண்மை. மனிதனின் உடலில் பயனற்ற ஒரு உறுப்பாகவும், பல நேரங்களில் தொல்லை கொடுக்கும் ஒரு உறுப்பாகவும் குடல் வால் (Appendix) உள்ளது. அந்த உறுப்பில் உண்டாகும் அழற்சியும், அதன் விளைவுகளும் பற்றி நோக்குவோம். அறிமுகம் : நம் உடலில் குடல் பகுதி, சிறுகுடல், பெருங்குடல் என இரண்டு பகுதிகளாக பிரிந்துள்ளன. சிறுகுடல் நாம் உண்ணும் உணவில் உள்ள அனைத்துச் சத்துப் பொருள்களையும், உறிஞ்சும் தன்மை உடையது. சத்துக்கள் உறிஞ்சப்பட்ட உணவின் மிச்சங்கள் சக்கையாக்கப்பட்டு மலமாக மாறி பெருங்குடலில் சேர்ந்து வெளியேற்றப்படுகின்றன. இந்த சிறுகுடல், பெருங்குடலோடு இணையும் பகுதியில், வால் போன்று ஒரு உறுப்பு (சற்றேழறத்தாழ நம் சுண்டு விரல் அளவில்) இருக்கும். இதையே, குடல் வால் (Appendix) என்கிறோம். அப்பெண்டிக்ஸ் என்ற சொல்லுக்கு இணைப்பு என்று பொருள். குடலோடு இணைந்த இந்த உறுப்புக்கும் அப்பெண்டிக்ஸ் என்றே பெயர். இனி அதில் ஏற்படும் அழற்சி பற்றி காண்போம். குடல் வால் அழற்சி (Appendicitis) குடல்வால் அழற்சி, திடீர் குடல்வால் அழற்சி (Acute Appendicitis) என்றும், நாள்பட்ட குடல்வால் அழற்சி (Chronic Appendicits) என்றும் இரண்டு வகைப்படும்.


திடீர் குடல் வால் அழற்சி: (Acute Appendicitis)

நோய்க் காரணியம்: (Aetiology) இந்நோய் இருபாலருக்கும் வரும். பொதுவாக எந்த வயதில் வேண்டுமானாலும் வரக்கூடியதாக இருப்பினும், பெரும்பாலும் இளைஞர்களுக்கும், சிறு வயதுக்காரர்களுக்குமே அதிக அளவு வருகிறது. இந்நோய் எதனால் உண்டாகிறது என உறுதியாகக் கூறமுடியாவிட்டாலும், மலம் கெட்டிப்பட்டு குடல்வால் உள் புகுந்து, அதை அடைத்துக் கொள்வதால், அந்த இடத்தில் நோய்த் தொற்றும் (Infection) அழற்சியும் (Inflammationி) உண்டாகலாம். அல்லது சில வகை வைரஸ்களால் இந்நோய் வரலாம்.

நோயின் அறிகுறிகள்: நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திடீரென்று வயிற்றில் வலி தோன்றும். இந்த வலி மிகவும் கடுதையாக இருக்கும், அடி வயிற்றின் (Iliac Regeion) வலது புறத்தில் கடுமையாக இருந்தாலும், தொப்புளைச் சுற்றியும், வயிற்றின் மற்ற பகுதிகளிலும் வலியை உணர முடியும். குமட்டலும், வாந்தியும் உண்டாகும். லேசாக காய்ச்சலோ அல்லது கடுமையான காய்ச்சலோ ஏற்படும். உடனடியாக நோயைக் கண்டுப்பிடிக்காமல் விடும் நிலையில், நோய் குடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவும். இந்நிலையில் கடுமையான வயிற்று வலி மேலும் கடுமையாகும். அடிவயிறுப் பகுதி மட்டுமல்லாது வலி முழுமையாக வயிறு முழுவதும் தெரியும். மருத்துவம் செய்யாமல் இந்த நிலையிலும் இருந்தால் நோய்த் தொற்று பரவி, வயிற்றுப் பை அழற்சி (Peritionitis)யை ஏற்படுத்தும். இந்த நிலையிலும் மருத்துவம் செய்யாமல் விட்டால், நோயின் கடுமை அதிகமாகி, குடல் வால் வெடித்து, உயிருக்கே ஆபத்தை உண்டாக்கும்.


நோயறிதல்:

இந்நோய் பெரும்பாலும் வலி உண்டாகும் இடம், வலியின் தன்மை வாந்தி போன்ற அறிகுறிகளாலேயே அறிப்படுகிறது. சில நேரங்களில் அறிகுறிகள் முழுமையாகத் தெரியாமல் குழப்பம் ஏற்படும். அதுபோன்ற சமயங்களில், ஒலி அலைப் பதிவி (Ultr Sonogram) மூலம் நோயறியலாம். இரத்த பரிசோதனையில், இரத்த வெள்ளணுக்கள் அதிகமாக இருக்கும் சிலருக்கு நோய் அறிகுறிகள் சரியாக தெரியாத நிலையில், குடல் நிணநீர் முடிச்சுகள் அழற்சி போன்றோ, பெண்களாக நோயாளிகள் இருப்பின் கருக்குழாய் அழற்சியாகவோ கூடத் தெரியலாம். ஆனால், ஒலி அலைப் பதிவின் மூலம் பெரும்பாலும் நோயைக் கண்டறிய முடியும்.

மருத்துவம்:

இந்நோய்க்கு பெரும்பாலும் அறுவை மருத்துவமே சிறந்தது. அடி வயிற்றின் வலதுபுறம் திறந்து, குடல் வால் முழுமையாக அகற்றப்படும். நவீன மருத்துவ யுகத்தில் லேப்ராஸ்கோப் (Laprascope) மூலம், வயிற்றில் சிறு துளையிட்டு, அதன் மூலம் குடல் வால் அகற்றம் (Appendicectomy) செய்யப்படுகிறது. நோயாளி உடனே வீட்டிற்கு திரும்பி விடலாம். சற்று மருத்துவச் செலவு அதிகமானாலும், பரவலாக இம்மருத்துவம் தற்சமயம் செய்யப்படுகிறது. சில நோயாளிகளுக்கு அறுவைச் மருத்துவம் செய்ய இயலாத நிலை ஏற்படும். அந்நோயாளிகளுக்கு நுண்ணுயிர் கொல்லிகள் (AntiBiotics) மூலம் மருத்துவம் செய்யலாம். பொதுவாக வயிற்று வலி என்றதும், வீட்டில் உள்ளோர், கை வைத்தியம் செய்கிறேன் என்று விளக்கெண்ணெய் எடுத்து அடிவயிற்றில் தடவி விடுவர். குடல் வால் அழற்சி இதனால் குணமாகாதது மட்டுமல்ல, நோயின் தீவிரம் அதிகமாகி உயிருக்கே ஆபத்து உண்டாகும். கடைசியில் விளக்கெண்ணைக்கும் கேடே ஒழிய, பிள்ளை பிழைத்த பாடில்லை என்ற நிலையே ஏற்படும்.


வேறு சிலரோ, நாமக்கட்டியை உரைத்து அடிவயிற்றில் தடவுவர். கடைசியில் கோவிந்தா, கோவிந்தா என்று கூவும் நிலையே உண்டாகும். சிலர் இது போன்று வயிற்று வலி வந்தவுடன் சூடு என்பார்கள். இது போன்ற மூடநம்பிக்கைகளையும், கை வைத்தியம் போன்றவற்றைத் தவிர்த்து, சரியான மருத்துவத்தின் மூலம் 100 சதவீதம் நோயாளியை குணப்படுத்தலாம்.

நாள்பட்ட குடல் வால் அழற்சி:

சில நேரங்களில் அறுவை மருத்துவம் உடனே செய்ய இயலாத நோயாளிகளுக்கு மருத்துவம் மருந்துகளை உட்செலுத்துவதன் மூலம் மேற்கொள்ளப்படும். அவ்வகை நோயாளிகளுக்கு நோயின் அறிகுறிகள் முழுமையாக மறைந்துவிடும். உடலின் எதிர்ப்புச் சக்தி குறைந்தாலோ அல்லது நோய் தொற்று ஏற்படும் பொழுதோ, நோயின் அறிகுறிகள் மீண்டும் தோன்றும். இந்த நிலை மீண்டும், மீண்டும் தோன்றும் பொழுது, திடீரென்று ஆபத்தான நிலைக்கு நோயாளி சென்றுவிடுவர். அதனால் வாய்ப்புக் கிடைக்கும் பொழுது, அறுவை மருத்துவம் மூலம் குடல் வாலை அகற்றி விடுவதே மிகவும் நல்லதாகும். 

Sunday, 22 October 2017

healthy spring summer fruits vegetables-கோடைகால பழம் காய்கறிகள்

கோடைகாலத்திலும் வசந்தமாய் வாழ, இத சாப்பிடுங்க...

குளிர்காலத்தின் இறுதியிலும், கோடைகாலத்தை வரவேற்கும் விதமாக வரும் காலம் தான் வசந்த காலம். இந்த காலத்தில் பகல் நேரம் அதிகமாகவும், இரவு பொழுது குறைவாகவும் இருக்கும். இவ்வாறு பகல் மற்றும் இரவு பொழுதுகளின் நேரம் மாறுவது மட்டுமின்றி, காலநிலையும் மாறுபடுகிறது. இத்தகைய காலநிலை மாறுபடுவதால், நிறைய வகையான காய்கறிகளும், பழங்களும் மார்கெட்டில் கிடைக்கும் என்று அர்த்தம். உதாரணமாக, ஆரஞ்சு பழமானது பொதுவாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் அதிகம் கிடைக்கும் ஒரு குளிர்கால பழம். ஆனால் இந்த பழம் வசந்த காலத்திலும் கிடைக்கும்.

பொதுவாக அனைத்து பழங்களுமே அனைத்து நாட்களும் கிடைக்கும். ஆனால் அதனை சீசன் போது மட்டுமே அதிகம் சாப்பிட முடியும். ஏனெனில் அப்போது தான், அதன் விலையானது மிகவும் மலிவாக இருக்கும். தற்போது வசந்த கால முடிவு மற்றும் கோடை கால ஆரம்பம் என்பதால், இந்த காலத்திலும் ஒரு சில காய்கறிகள் மற்றும் பழங்கள் மிகவும் மலிவான விலையில் கிடைக்கும். உதாரணமாக, அஸ்பாரகஸ், அவுரிநெல்லிகள், ஆப்ரிக்காட் மற்றும் பூண்டு போன்றவை அதிகம் கிடைக்கும்.?

இப்போது வசந்த மற்றும் கோடை கால பழங்கள் மற்றும் காய்கறிகள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, அவற்றை வாங்கி சாப்பிட்டு, கோடைகாலத்திலும் வசந்தமாய் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.




அவுரிநெல்லிகள் (Blueberries) 
கோடை காலப் பழமான பெர்ரிப் பழங்களில் ஒன்றான அவுரிநெல்லிகளிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால், இவற்றை சாப்பிட்டால் உடல் எடை குறைவதோடு, இதயமும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.
 

கேரட் 
ஆண்டு முழுவதும் இந்த காய்கறி கிடைக்கும். ஆனால் இந்த காய் வசந்த மற்றும் கோடை காலத்தில் சற்று அதிகமாகவே கிடைக்கும். மேலும் இதனை சாப்பிட்டால், உடல் குளிர்ச்சி அடைவதோடு, கண்களுக்கும் மிகவும் நல்லது.

            

                

ஆப்ரிக்காட் 
வெதுவெதுப்பான காலநிலையில் அதிகம் வளரக் கூடியது தான் ஆப்ரிக்காட். அதிலும் இந்த பழம் வசந்த காலத்தில் அதிகம் கிடைக்கக்கூடியது. இந்த பழத்தில் இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும் அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. மேலும் கலோரிகள் குறைவாக இருப்பதால், உடல் எடையை குறைக்க நினைப்போர் அதிகம் வாங்கி சாப்பிடலாம்.





கூனைப்பூக்கள் (Artichokes) 
இதில் நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் உள்ளது. எனவே இந்த ஆரோக்கியமான காய்கறியை வாங்கி சாப்பிடுவதை மறக்க வேண்டாம்.




பீன்ஸ் 
வசந்த கால காய்கறிகளுள் பச்சை நிற பீன்ஸ் ஒன்று. இந்த காய்கறி இதயத்திற்கும், உடல் எடையை குறைப்பதற்கு சிறந்தது. எனவே டயட்டில் இருப்பவர்கள், இந்த காய்கறியை, இந்த நேரத்தில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.



முள்ளங்கி
 வசந்த காலத்தில் வெள்ளை மற்றும் சிவப்பு நிற முள்ளங்கியை அதிகம் வாங்கி சாப்பிடலாம். இந்த காய்கறிகளில் உடலை ஆரோக்கியத்துடன் வைக்கும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன.



உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கை பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். அத்தகையவர்களுக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால், இந்த காய்கறி வசந்த மற்றும் கோடை காலத்தில் அதிகமாகவும், விலை மலிவுடனும் கிடைக்கும்.



வெள்ளை வெங்காயம் (Vidalia Onions)
வருடம் முழுவதும் தான் வெங்காயம் கிடைக்கும். அதிலும் வெங்காயத்தில் நிறைய வகைகள் உள்ளன. ஆனால் அவற்றில் ஒன்றான சல்பர் அதிகம் நிறைந்துள்ள வெள்ளை வெங்காயமானது, இந்த காலத்தில் அதிகம் கிடைக்கும், இந்த வெங்காயம் சுவாசக் கோளாறான ஆஸ்துமாவிற்கு மிகவும் சிறந்தது.



அவகேடோ 
அவகேடோவில் நிறைய உடல், சருமம் மற்றும் கூந்தலுக்கான நன்மைகள் நிறைந்துள்ளன. இத்தகைய பழம் பொதுவாக ஒரு வசந்த கால பழமாகும். எனவே தற்போது இதனை முடிந்த அளவில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.


பூண்டு/ பசும் பூண்டு
வாசனைக்காக பயன்படுத்தும் பூண்டு/பச்சை பூண்டு (Garlic/green garlic) இதயத்திற்கு மிகவும் நல்லது. இந்த காய் இரைப்பை குடல் நோய் வருவதை தடுப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்...





வெள்ளரிக்காய்
நீர்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள வெள்ளரிக்காய் கோடை காலத்தில் அதிகம் விற்பதற்கு காரணம், இது ஒரு கோடை கால காய்கறி என்பதாலேயே ஆகும். இதனால் நீர்ச்சத்து உடலுக்கு கிடைப்பதோடு, செரிமான மண்டலமும் நன்கு செயல்படும்.





மிளகாய் 
இந்த காயும் கோடை காலத்தில் அதிகம் கிடைக்கும். இது உணவிற்கு காரத்தை மட்டும் தருவதில்லை, உடலுக்கு தேவையான ஒரு சில நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளது. அதாவது இதனை உணவில் சேர்ப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, உடல் எடையும் குறையும்.



அத்திப்பழம் 
வசந்தம் மற்றும் கோடை காலத்தில் விற்கப்படும் பழங்களில் அத்திப்பழமும் ஒன்று. இந்த பழம் பாலுணர்ச்சியை தூண்டும் ஒரு சிறப்பான பழங்களுள் ஒன்று. எனவே இதனை வாங்கி சாப்பிட்டு, காதல் வாழ்க்கையை நன்கு சந்தோஷமாக அனுபவியுங்கள்.






நெல்லிக்காய் 
நெல்லிக்காயில் வைட்டமின் சி, நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் இருக்கிறது. இது உடல் முழுவதற்கும் ஒரு சிறந்த ஆரோக்கியத்தை தரக்கூடியது. மேலும் இதனை வைத்தும், இந்த காலத்தில் ஊறுகாய் செய்து வைத்துக் கொள்ளலாம்.


எலுமிச்சை
இந்த பழம் கோடை மற்றும் வசந்த காலத்தில் மார்க்கெட்டில் அதிகம் கிடைக்கும். அதனால் தான் கோடை காலத்தில் எலுமிச்சை ஊறுகாயை அதிகம் போடுகின்றனர்.






Thursday, 19 October 2017

கர்பிணி பெண்கள் உட்கொள்ளத்தக்க சிறந்த ஆகாரங்கள் !! (Pregnant woman)

புடலம்பிஞ்சு, அவரைப்பிஞ்சு, வாழைப்பூ, வெண்டைக்காய் வாழைக்கச்சல், மாவடு, சேனை, கருணை, உருளைக்கிழங்கு, பாலபிஞ்சு, சிறுகீரை, அரைக்கீரை, மணத்தக்காளி, வெந்தயக்கீரை, பொன்னாங்கண்ணி, முளைக்கீரை, எலுமிச்சம்பழம், புளியாரை வேப்பம்பூ, கடுகு, பச்சைக் கொத்துமல்லி, துவரம் பருப்பு, பாதாம் பருப்பு, பச்சைப்பயறு, முந்திரிபருப்பு,மாம்பிஞ்சு, களாக்காய், நெல்லிக்காய், கச்ச நார்த்தங்காய், இஞ்சி, சுக்கு தட்டிப்போட்டுக் காய்ச்சிய அரிசிகஞ்சி, பாற்கஞ்சி, நெற்கஞ்சி, பாயாசம், மிளகு முதலியவை சேர்த்துச்செய்த தோசை, இட்டிலி, லட்டு, ஹல்வா, நல்ல கெட்டித் தேன், புதிய பசுநெய் அதிமதுரம், கரும்பு உள்ளிப்பூண்டு, முதலியனவாம்.. 


இலவங்கப்பட்டை மட்டும் ஏழாம் மாதத்திற்குப் பிறகு பிரசவிக்கும்வரை உபயோகிக்கலாம், மிகப் புளிப்பும், கசப்பும் காரமும், உவர்ப்புமுள்ள பாதார்த்தங்களை அதிகம் சேர்த்தல் கூடாது அஜீரணத்தை உண்டு பண்ணக்கூடியதும், அதிக நேரஞ்சென்ற பின்னர் ஜீரணமாகத்தகது, சூதக விருத்தி, மலபேடு ஜலபேதி முதலியவற்றை உண்டுபண்ணத்தக்கதுமாகிய பதார்த்தங்களை உண்ணுதல் கூடாது பால், சக்கரை,

 லேசான உப்புப்போட்டுப் பக்குவஞ் செய்த தின்பண்டங்கள், இன்னும் எளிதில் ஜீரணமாகத்தக்க வஸ்துக்கள் இவைகளைக் கர்பிணி சாப்பிடலாம் பழய வஸ்த்துக்களையும் வேகமலே அல்லது தீய்ந்தோ உள்ள வஸ்த்துக்களைக் கர்ப்பிணி அருந்தலாகாது. வெங்காயந் தின்றுவந்தால் குழந்தை அதிக விஷமம்செய்யும் கர்ப்பிணி அதிகமாய்த் தூங்காமலும், ஆனால், மிதமான நித்திரை, செய்துகொண்டும் நல்லவிஷயங்களையே நினைத்துக்கொண்டும், விசனத்திற்குச் சிறிதும் இடங்கொடாமல் மனத்திற்கு நல்ல ஊக்கத்தையும், தைரியத்தையும், சாந்தத்தையும்கொடுத்து புத்தியை விஸ்தாரப்படுத்தி, அறிவையும் ஆனந்தத்தையும் விளைவிக்கும் அருமையான புஸ்தகங்களைப் படிக்கவேண்டும் தான் விரும்பிய உணவுகளைக் கர்ப்பிணி உண்டு களிப்போடு இருக்கவேண்டும். 

நிலக்கடலை கொள்ளு, மொச்சை, பெரும்பயறு முதலிய வஸ்த்துக்களையும் அருந்தக்கூடாது குரூபிகளோடு அதிகமாகப் பழகாமலும் இருக்கவேண்டும் இங்கு புகன்ற உணவுகளையுட்கொண்டு வந்தால் கர்ப்பிணி நல்ல ஆரோக்கியம்பெற்று, அழகுள்ள குழைந்தையைச் சுகமே பிரசவிக்கலாம்.

மல்லிகைப் பூவில் உள்ள மருத்துவ குணங்களைப் பற்றி அறிவோம்

மருத்துவகுணம் கொண்டது மல்லிகைப் பூ. வயிற்றில் பூச்சி இருந்தால் உங்கள் உடல் மெலிவடைவது மட்டுமின்றி உபாதைகள் உண்டாக்குவதோடு, சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும். அப்படியானவர்கள் 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கி புழு, நாடாப் புழு போன்றவை அழியும்.

இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக அடிக்கடி பூச்சி வெளியேற மருந்து சாப்பிடுபவர்கள் தவிர அனைவருமே இந்த மல்லிகைத் தண்ணீரை அருந்தலாம். இதேப்போல, மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி, அவற்றை பொடியாக்கி  தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும்.

வயிற்றில் புண் இருந்தால் வாய்ப்புண் ஏற்படும். இதனை சரிசெய்ய மல்லிகைப் பூவை தண்ணீரில் கொதிக்க வைத்து அது  பாதியான பிறகு வடிகட்டி அதனை காலை மாலை என இரு வேளை அருந்தி வர வாய்ப்புண், வயிற்றுப் புண் நீங்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி உயரும். இது மட்டுமல்லாமல் அவ்வப்போது ஏற்படும் சில உடல் நலப் பிரச்சினைகளுக்கும் மல்லிகை சிறந்த நிவாரணியாக உள்ளது. 


மல்லிகைப் பூவிலிருந்து ஒரு வகை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் பல்வேறு உடல் உபாதைகளுக்கு  அருமருந்தாக உள்ளது. அடிபட்டாலோ அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும், மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும். உடலில் இந்த எண்ணெயை மசாஜ் செய்யலாம். உடல்வலி  நீங்குவதோடு, குளிர்ச்சி அடையும்.
மன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், மல்லிகைப் பூவை வாங்கி தலையில் வைத்தால்  மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும்.

தலையில் ஏற்படும் பொடுகு, அரிப்பு உண்டாவதற்கான காரணங்களும் தீர்வுகளும்!

மன அழுத்தம், டென்ஷன், தூசி, பரம்பரைவாகு, ரத்த சோகை, புரதச்சத்து குறைபாடு, ஹார்மோன் கோளாறுகள், தூக்கமின்மை அல்லது வேறு எதாவது நோய்க்கான அறிகுறி போன்ற பல காரணங்களால் கொத்துக் கொத்தாகத் தலை முடி உதிரும்.


பொடுகு பாக்டீரியாவால் ஏற்படுகிறது. முடியைச் சுற்றி பாக்டீரியா அரித்துவிடும். இதனால், தலையின் மேற்பரப்பு தோலில்  இறந்துபோன உயிரணுக்கள் செதில் செதிலாகத் தோன்றி அரிப்பை ஏற்படுத்தும். இதுதான் பொடுகு. பொடுகு இருந்தால், பேன்,  ஈறு வந்து தலையில் வாசம் செய்யும்.
 
பொடுகு இருந்தால் அரிப்பு ஏற்படும். தலையில் உள்ள அதிகமான வியர்வையால் மாசு படிந்து பூஞ்சை காளான்கள்  உண்டாகிறது. இதனால் பொடுகு ஏற்பட்டு தலையில் அரிப்பு உண்டாகிறது.
 
ஒரு கப் மரிக்கொழுந்துடன், அரை கப் வெந்தயக்கீரையை அரைத்து தலைக்கு பேக் போட்டு 10 நிமிடங்கள் கழித்து அலசுங்கள்.  சொறி, சிரங்கு, கட்டி, பேன், பொடுகு அனைத்தும் நீங்கி தலை சூப்பர் சுத்தமாகிவிடும். 
 
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இலுப்பை புண்ணாக்கை வாங்கி பொடித்து நீரில் இட்டு நன்றாக கலக்கவும். இதை தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளிப்பதால் பொடுகு தொல்லை சரியாகும். 
 
நித்திய கல்யாணி இலையை பயன்படுத்தி புண்களை ஆற்றும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: தேங்காய் எண்ணெய், நித்திய கல்யாணி இலை. ஒரு பாத்திரத்தில் 2 பங்கு தேங்காய் எண்ணெய் எடுத்தால், ஒரு பங்கு நித்திய கல்யாணி  இலை பசை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை ஆறவைத்து வடிகட்டி புண்கள் மேலே பூசுவதால் நல்ல பலன்  கிடைக்கும். சீல் பிடித்த, புரையோடிய மற்றும் ரத்தம் கசிகின்ற புண்கள் விரைவில் குணமாகும்.
 
சாம்பார் வெங்காயம் (சின்ன வெங்காயம்) கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்த்து, 15 நிமிடங்கள் கழித்து குளிப்பதால்  பொடுகு தொல்லை மறையும்.
 
வாரம் ஒரு முறையாவது நல்லண்ணை தேய்த்து குளிப்பது நல்லது. பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளிச்சால் பொடுகுக்கு ரெம்ப நல்லது. வெந்தய பவுடரை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லையும் தீரும் உஷ்ணமும்  குறையும்.