Wednesday, 18 October 2017

இதெல்லாம் எவ்ளோ சாப்டாலும் எடை அதிகரிக்காது தெரியுமா?

உடல் எடை குறைப்பு இன்று எல்லாரும் சொல்லிக் கொண்டிருக்கிற விஷயம். அதற்கு முழு முதற்காரணம் மருத்துவ ரீதியில் அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் விழிப்புணர்வு என்றே சொல்லலாம். உடல் எடை அதிகரிப்பால் என்ன மாதிரியான பிரச்சனைகள் வருகிறது என்று தொடர்ந்து சொல்வதால் வந்த விணையாக கூட இருக்கலாம். ஒவ்வொருவருக்கும் தான் சரியான எடையில் தான் இருக்கிறோமா என்ற சந்தேகங்கள் உண்டு.




அதோடு எந்த உணவுப் பொருளை பார்த்தாலும் இதனை சாப்பிடலாமா வேண்டாமா என்று யோசிக்கத் தோன்றுகிறது.அதோடு சில உணவுகள் காரணங்களே இன்றி அல்லது தவறான புரிதல்களோடு ஒதுக்கி வைத்துக் கொண்டேயிருக்கிறோம். சில உணவுப்பொருட்கள் எப்போது வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் தெரியுமா? அவை என்னென்ன என்று தெரிந்து கொள்ளுங்கள் .


காலிஃப்ளவர் :

குறைவான கலோரிகள் கொண்ட காலிஃப்ளவர், உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் தேவையான ஒன்று. ஒரு கப் காலிஃப்ளவரில் 28-52 அளவு கலோரிகளே உள்ளது என்பதால், இதை உட்கொள்வதால் உடலில் அதிக அளவில் கொழுப்பு சேர்வதில்லை. மேலும் உடல் எடையையும் குறைத்துக் கொள்ள முடியும்.
காலிஃப்ளவரில் உள்ள பொட்டாசியம் சத்து, உடல் செயல்பாடுகளை சீராக்குவதுடன், நீர் அருந்துதலை அதிகப்படுத்தும்.
ஒரு கப் காலிஃப்ளவரில், சுமார் 3.35 கிராம் அளவில் நார்சத்து உள்ளது. நார்சத்து உடலுக்கு மிகவும் தேவை. ஏனெனில் இவையே செரிமானத்தை சரி செய்கின்றது.

பீட்ரூட் :

பீட்ரூட்டில் நிறைய உணவுச் சத்துகள் உண்டு. விட்டமின் சி, பொட்டாசியம்,ஃபோலாசின், பீட்டா கரோட்டின், மாவுச்சத்து, இரும்புச் சத்து இதில் அதிகம் உள்ளன.
பீட்ரூட்டில் இருக்கும் முக்கியமான தன்மை இதில் கொழுப்புச் சத்து கிடையாது. இதை ஒரு காலத்தில் ஐரோப்பாவில் புற்றுநோய்த் தடுப்பாக பயன்படுத்தினார்கள். இதன் சிவப்பு வண்ணத்தில் (பீட்டா கரோட்டின்) புற்றுநோய் தடுப்புத் தன்மை சேர்ந்திருப்பதால் புற்றுநோயுடன் போராடும் சக்தி உள்ளது. மேலும் பீட்ரூட் நமது உடலின் ஆக்ஸிஜன் உறிஞ்சும் சக்தியை அதிகரிக்கிறது.

பூசணிக்காய் :

பூசணிக்காயின் விதைகளில் விட்டமின் பி, விட்டமின் ஏ, மினரல்ஸ், கால்சியம், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், ஸிங்க், பிடோசின்ஸ், லினோனெலிக் அமிலம் ஆகியன அடங்கியுள்ளன. இதில் கலோரி மிகவும் குறைவாக இருப்பதால் உடல் எடை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தாராளமாக சாப்பிடலாம். மேலும் பூசணிக்காய் உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றக்கூடியது.






No comments:

Post a Comment